[X] Close

“தடுப்பூசி கொள்கைதான் என்ன?”- மத்திய அரசு நோக்கி உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்த கேள்விகள்

Subscribe
Supreme-court-ask-questions-about-Corona-vaccine

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். ஆனால் தடுப்பூசி செலுத்துவது என்பது மத்திய அரசின் தலையாய கடமை. அப்படி இருக்கும் பொழுது மாநில அரசுகளுக்கு எதற்காக கொரோனா தடுப்பூசிகளை விலைக்கு விற்க வேண்டும். அதனை இலவசமாக வழங்க வேண்டியது தானே என கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது. வேறு என்னென்ன கேள்விகளையெல்லாம் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது என்பதை விரிவாக காணலாம்.


Advertisement

கொரோனா தடுப்பூசிகள், அத்தியாவசிய மருந்து பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு கடந்த ஜூன் இரண்டாம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:


Advertisement
  • நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்ட எண்ணிக்கை குறித்தும் இதில் எத்தனை பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டவர்கள் எத்தனை பேர்? கிராமப்புறங்களில் எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரிவாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
  • தடுப்பூசிக்காக நடப்பாண்டின் மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 30,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு இந்த தொகையினை இதுவரை எந்தெந்த வழிகளிலெல்லாம் செலவு செய்திருக்கிறது என்பது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதுவரை மத்திய அரசு வாங்கியுள்ள அனைத்து தடுப்பூசிகளின் விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்ஷீல்ட், கோவேக்சின், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசி என அனைத்து தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை தேதி உள்ளிட்ட விவரங்கள் விரிவாக வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது 45 வயதுக்கு மேலான அவர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் மட்டும் மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வரும் நிலையில் 18 வயது முதல் 45 வயது வரையிலான அவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொழுது அதை ஏன் இலவசமாக வழங்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
  • மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள நிதியிணை இதற்காக செலவு செய்யலாம் தானே என கேள்வி எழுப்பியதோடு எஞ்சியுள்ள மக்களுக்கு எப்போது, எப்படி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற திட்டத்தை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.
  • மாநிலங்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துகின்றன என மத்திய அரசு கடந்த மே 9ம் தேதி மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த விவகாரங்களில் உண்மையில் மத்திய அரசின் நிலைப்பாடு தான் என்ன? தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக கொள்கை முடிவு ஏதேனும் எடுத்திருந்தால் அதுகுறித்த ஆவணங்களை இரண்டு வாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
  • தடுப்பூசி செலுத்துவது என்பது அரசின் அடிப்படை கடமை. தற்போதைய சூழலில் ஒற்றை முழு முக்கியத்துவமும் இந்த பணிக்கு தான் வழங்க வேண்டும் அவை குறித்த விஷயங்கள் வெளிப்படையாக தெரிந்தால்தான் தங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் என மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என நீதிபதிகள் கூறியிருந்தார்.

கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் நெட்டிசன்கள்:

உச்சநதிமன்றத்தின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் உரையிலேயே பதில்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி கொள்கை குறித்தும் மாநிலங்களுக்கு ஏன் அதனை இலவசமாக வழங்க கூடாது எனவும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 35,000 கோடி ரூபாய் என்ன வகையில் செலவு செய்யப்பட்டது என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடியின் உரை பதில் அளிப்பதாக உள்ளது.

இதனை அடத்து மத்திய அரசிற்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டிற்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

- நிரஞ்சன் குமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close