[X] Close

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம் - பிரதமரின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

Subscribe
I-welcome-the-Prime-Minister-Narendra-Modi-s-statement-indicating-that-the-Union-Government-will-provide-COVID19-Vaccine-to-the-states-free-of-cost-tweets-Tamil-Nadu-Chief-Minister-MK-Stalin

மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தடுப்பூசி கொள்கையில் மத்திய அரசின் முந்தைய நிலையை மாற்றிக் கொண்டதற்கு பாராட்டுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தடுப்பூசிக்கான பதிவு, நிர்வாகம் மற்றும் நடைமுறைபடுத்துதல் மாதிரியானவற்றை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டுமெனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 


Advertisement

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து வரும் நிலையில் தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட நிலையில், மேலும் மூன்று தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தெரிவித்தார். வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும் என்று பேசிய பிரதமர், தடுப்பூசிக்காக வகுக்கப்பட்ட புதிய கொள்கை வரும் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்தார். மே மாதம் முதலே தடுப்பூசி விவகாரத்தில் மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால், கொள்முதல் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு பிரச்னை ஏற்பட்டதால் புதிய கொள்கை வகுக்கப்பட்டதாகவும் கூறினார்.

அதன்படி கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்கும் என்றும், எனவே, தடுப்பூசிக்காக மாநில அரசுகள் இனி செலவழிக்கத் தேவையில்லை என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மாநிலங்களுக்கு வழங்கியது போக எஞ்சிய 25 சதவிகித தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என மோடி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close