[X] Close

லைவில் தற்கொலைக்கு முயன்ற நபர்: டெல்லி போலீஸ்க்கு தகவல் அனுப்பி காப்பாற்றிய ஃபேஸ்புக்

Subscribe
Man-harming-self-on-live-video-saved-after-Facebook-s-US-office-alerts-Delhi-Police
ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த நபர் குறித்து அமெரிக்கா ஃபேஸ்புக் அதிகாரிகள் டெல்லி போலீசாருக்கு தகவல் தந்தனர்.
 
டெல்லி சைபர் பிரிவு போலீசாருக்கு அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்திலிருந்து அவசர இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அந்த மெயிலில், டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும் அவரை காப்பாற்றும்படியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சைபர் போலீசார் தற்கொலைக்கு முயன்ற நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
 
இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்நபரின் முகவரி உள்ள இருப்பிடத்திற்கு சென்றனர். அந்த நபர், அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்பு 39 வயதுடைய அந்த நபர் காப்பாற்றப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து டெல்லி நகர காவல்துறை துணை கமிஷனர் ராய் கூறுகையில், ‘‘அந்த வீடியோவில், அந்த நபர் வீட்டின் உள்பக்கம் தாளிட்டுக் கொண்டார். கதவை திறக்குமாறு அவரது குழந்தை வலியுறுத்தும் குரலும் கேட்கிறது. அவர் டெல்லியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது, ஆனால் அவரது ஃபேஸ்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் சுவிட்ச் ஆபில் இருந்தது. அதனால், தொழில்நுட்ப துறை வல்லுநர்களுக்கு தகவல் தெரிவித்து முகவரியை கண்டுபிடிக்கச் சொன்னோம்.

பின்னர் அவர் துவர்காவின் பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் சைபர் பிரிவினர் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அதிகாலை 2 மணியளவில் இரு போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்தனர்’’ என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close