[X] Close

சளி பிரச்னைக்காக சுகாதார நிலையத்திற்கு தனி ஆளாய் வந்த 3 வயது சிறுமி- வியந்துபோன மருத்துவர்

Subscribe
Baby--day-out--3-year-old-Nagaland-girl-with-cold-visits-doctor-by-herself-while-parents-were-at-work

தந்தை தாய் வேலைக்குச் சென்ற நிலையில் தனக்கு சளி அறிகுறிகள் தென்பட்டதால் சுகாதார நிலையத்திற்கு தனியாக வந்த 3 வயது சிறுமியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

நாகாலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி லிபாவிக்கு (Lipavi) சளி அறிகுறிகள் தென்பட்டுள்ளது. அந்த நேரம் விவசாயம் பார்க்கும் லிபவியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட தனி ஒருத்தியாக தனது உடலை பரிசோதிக்க ஹீபூலிமி (Hebolimi கிராமத்தில் உள்ள சுகாதார மையத்திற்கு நடையை கட்டிவிட்டார் லிபாவி. தனது பிரச்னையை கூறுவதற்கு தனி ஆளாய் முகக்கவசத்துடன் வந்த சிறுமியை பார்த்த மருத்துவர் ஆச்சரியமடைந்தார். இதுதொடர்பான புகைப்படம்சமூகவலைதளங்களில் வைரல் ஆன நிலையில் லிபாவியை நெட்டிசன்கள் உச்சிமுகர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து அம்மாநிலம் பாஜக தலைவர் பெஞ்சமின் யெப்தோமி கூறும் போது, “ 3 வயது சிறுமியின் இந்த செயல் மருத்துவரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் பெரியவர்களே தங்களை பரிசோதித்துக்கொள்ளவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் தயக்கம் காட்டி வரும் நிலையில், லிபாவியின் அப்பாவித்தனம் பிறருக்கு முன்னுதராணமாக அமைந்துள்ளது. அவரை கடவுள் ஆசிர்வதிக்கப்பட்டும். அவள் நலமாக இருக்கிறாள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


Advertisement

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close