[X] Close

துளிர்க்கும் நம்பிக்கை: "முதுமையில் கொரோனா; உணவின்றி தவிப்பு" - உதவிக்கரம் கோரும் குரல்

Subscribe


Advertisement
"நான் ஒரு ஆட்டோ டிரைவர். எனக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். ஊரடங்கு நேரத்தில், என் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேவை" - அகஸ்டின்

"எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டவர் நான். அன்றாட தேவைக்கு, உணவு மற்றும் மளிகைப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேவை" - உமாதேவி

image


Advertisement

"நானும், என் மனைவியும் வயதான தம்பதியினர். நாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உதவ யாரும் முன்வரவில்லை. எங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி தேவை" - காதர் முகைதீன்

"நான் ஆட்டோ ஓட்டுனர். இந்த ஊரடங்கு நேரத்தில், வருமானம் இல்லாததால், என் வீட்டின் மருத்துவத் தேவைகளை கவனிக்க முடியவில்லை. என் மனைவிக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்ய எங்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவை" - கோபிநாத்

"என் கணவர் மாற்றுத் திறனாளி. அவரால் தற்போது வேலைக்கு செல்ல இயலவில்லை. எங்கள் வீட்டில் 4 பேர் இருக்கிறோம். எங்களுக்கு, மளிகைப் பொருட்கள் தேவை" - மீனா


Advertisement

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

image

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close