[X] Close

இடிதாக்கி இறந்த உரிமையாளர் - சடலத்தை சுற்றிவந்து பரிதவிப்பை வெளிப்படுத்திய நாய்

Subscribe
The-master-who-died-of-thunder-the-dog-who-surrounded-the-corpse-and-expressed-condolences

பெரம்பலூர் மாவட்டத்தில் இடிதாக்கி உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை நாய் ஒன்று சுற்றிவந்தது அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.


Advertisement

பெரம்பலூர் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(55). ஆடுமேய்க்கச் சென்ற இவர் இடிதாக்கி இறந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை கட்டிலில் கிடத்தி உறவினர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர்.

image


Advertisement

அப்போது ராமச்சந்திரனின் வளர்ப்பு பிராணியான நாய் அவரது உடலை சுற்றியும், தாவி குதித்தும் தனது எஜமானனை இழந்த பரிதவிப்பை வெளிப்படுத்தியது. தொடர்ந்து ராமச்சந்திரன் உடலை எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பும் வரை ஆற்றுவார் இன்றியும் தேற்றுவார் இன்றியும் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தது காண்போரை கண்கலங்க வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close