[X] Close

துளிர்க்கும் நம்பிக்கை: "உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம்!" - உதவிக்கரம் கோரும் குரல்

Subscribe

"ஆட்டோ ஓட்டுநரான எனக்கு ஒரு காலில் ஏற்பட்ட காயத்தினால் அதிகநேரம் ஆட்டோ ஓட்ட முடியாத சூழ்நிலை. ஊரடங்கால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. மூன்றரை வயது குழந்தையும், 12 வயது மகனும் இருக்கிறார்கள். பள்ளி கட்டணமும் செலுத்த முடியாத நிலை. உணவு, அத்தியாவசிய பொருட்கள், கல்வி உதவி தேவை." - நாகலிங்கம்


Advertisement

"எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவருக்கு கை செயலிழந்துள்ளது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால், உணவிற்கே சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேவை." - கற்பக வேணி, ராமநாதபுரம்

"என் தம்பி சென்னை மாநகராட்சி பள்ளியில் 7 வது படிக்கப் போகிறான். என் அப்பா தினக்கூலி தொழிலாளியாவார். எனவே தம்பிக்கு கல்விக்காக பயன்படும் வகையில் செல்போன் தந்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." - வாஞ்சிஸ்வரன், முகப்பேர் கிழக்கு


Advertisement

"நான் தையல் வேலை செய்கிறேன். நான் வேலைக்கு சென்றால் தன் சம்பளம். இந்த லாக்டவுனால் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். என் மனைவியும் ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை செய்துவந்தார். இந்த இரண்டு வருடங்களாகவே வேலை இல்லை. என் ஒருவரின் வருமானம்தான். அதுவும் இப்போது இல்லை. வீட்டு வாடகை கூட தர இயலவில்லை. உதவி தேவை" - கன்னியப்பன்

"நான் ஹெச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்ட பெண். ஊரடங்கு காரணமாக பெரும் நெருக்கடி. மளிகை, உணவு பொருட்கள் தேவை" - பழனியிலிருந்து

"நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டுவளவு பகுதியில் தறித் தொழிலாளர்கள் 15 பேர் உணவின்றி இருக்கின்றனர். உடனடி உதவி தேவை" - கண்ணன்


Advertisement

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

image

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close