[X] Close

'கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசுதான் வாங்க வேண்டும், மாநில அரசல்ல' - உச்ச நீதிமன்றம்

Subscribe
-Government-of-India-should-buy-and-distribute-vaccines--not-states---Supreme-Court

இந்தியாவில் நிலவிவரும் கொரோனா தடுப்பூசி குறித்து உச்ச நீதிமன்றம், பேசியுள்ளது. அதில் மிக முக்கியமாக, தடுப்பூசிகளை மத்திய அரசுதான் வாங்கி விநியோகிக்க வேண்டும் என்றும், அது மாநில அரசின் வேலையல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை மாநில அரசுகள் விட்டிருப்பதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.


Advertisement

மத்திய அரசின் தடுப்பூசி கொள்முதல் பற்றி கேள்வியெழுப்பியிருக்கும் உச்சநீதிமன்றம், ‘மத்திய அரசு, இன்றுவரை தங்களின் கொரோனா தடுப்பூசிக்கான தேசிய கொள்கை ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை’ என்பதை குறிப்பிட்டுக் கூறியுள்ளது.

image


Advertisement

இதன்மூலம், மத்திய அரசின் தடுப்பூசி மீதான தேசிய கொள்கையிலேயே, ‘தேவையான தடுப்பூசிகளை மாநில அரசுகளும் – நகராட்சி நிறுவனங்களும் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும்’ என்றுதான் இருக்கிறது என நினைக்க தோன்றுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ‘தாமே முன்வந்து தடுப்பூசிகளை வாங்கி விநியோகித்து அந்த விவரங்களை தயாரிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது’ என்றும், ‘18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி விநியோகிக்க மத்திய அரசு ஏன் நேரடியாக முன்வரவில்லை’ என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வில் சந்திர சூட், நாகேஷ்வர ராவ், ரவிந்தர பட் ஆகிய 3 நீதிபதிகள் குழுவின் கீழ், இவை அனைத்தும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான மருந்துகள், தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன் குறித்து தொடக்கப்பட்டிருந்த வழக்கில் இவையாவும் கூறப்பட்டுள்ளது. இவர்களில் நீதிபதி சந்திர சூட், ‘18 – 45 வயதுக்குட்பட்டவர்களில், 50 சதவிகிதம் பேரால்தான் தடுப்பூசிகளுக்கு பணம் செலுத்தும் நிலை இருக்கும்போது, மீதமிருப்போரும் தடுப்பூசி பெற மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’ என்று கேட்டுள்ளார்.

image


Advertisement

மே மாத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் 18 – 40 வயதுக்குட்பட்டோர்தான் என்பதால், அவர்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், “தடுப்பூசிக்கான விலையை, தயாரிப்பாளர்களே நிர்ணயம் செய்ய காரணம் என்ன? மத்திய அரசு தாமே விலை நிர்ணயித்து, அதேயளவில் நாடு முழுவதும் விநியோகிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மே 1 ம் தேதிக்குப் பிறகு, மாநில அரசுகளே கொள்முதல் செய்யலாம் எனக்கூறும்போது, ஒவ்வொரு இடங்களிலும் கொள்முதல் விலைக்கேற்ப விலை அமைந்துவருவதையும், அதிலும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுவதையும் முன்னிறுத்தி இவையாவும் கூறப்பட்டுள்ளது.

இவற்றை தொடர்ந்து, கோவின் இணையதளம் வழியாக தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யவேண்டும் என்ற நிலை, இணையதள வசதியில்லாத கிராமப்புரங்களில் இருப்போருக்கு தடுப்பூசி சென்றடைவதை தடுக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க, 2 வாரம் வரை கால அவகாசம் மத்திய அரசுக்கு தரப்பட்டுள்ளது.

தகவல் உதவி : DNA, Zee

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close