கேரளாவில் நிகழும் அரசியல் படுகொலைகள்: குற்றவாளிகளைத் தண்டிக்க ராஜ்நாத் வலியுறுத்தல்

Kerala-RSS-man-hacked-to-death--Rajnath-Singh-calls-Pinarayi-Vijayan--raises-concern-over-political-violence

கேரளாவில் அரங்கேற்றப்படும் அரசியல் படுகொலைகளை தடுத்து நிறுத்துமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் நேற்று கொல்லப்பட்டது தொடர்பாக பினராயி விஜயனை ராஜ்நாத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கேரளாவில் அரசியல் வன்முறை பெருமளவில் அரங்கேறி வருவது குறித்து மத்திய அமைச்சர் கவலை தெரிவித்தார். இத்தகைய செயலில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதலமைச்சரை ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கேரள மாநிலம் முழுவதும் இன்று முழுஅடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இதனால், தமிழகம்-கேரளா இடையிலான பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement