காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு எதிராக பெங்களூருவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

Bengaluru--BJP-protest-against-Gujarat-Congress-MLAs

பெங்களூருவில் தங்கவைக்கப்பட்டுள்ள குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.


Advertisement

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதைத் தடுக்கும் நோக்கில், குஜராத்தைச் சேர்ந்த 44 எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பணிகளில் ஈடுபடாமல் எம்எல்ஏக்கள் பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாகக் கூறி கர்நாடக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் உடனடியாக குஜராத்துக்கு திரும்ப வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கூறினர். குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்பிக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 8ல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் அமித் ஷா, ஸ்மிர்தி இராணி மற்றும் பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது படேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.  182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 116 ஆகவும், காங்கிரஸின் பலம் 57 ஆகவும் இருக்கிறது. மாநிலங்களவை எம்பி தேர்தலில் வெற்றிபெற வேட்பாளர் ஒருவருக்கு 47 வாக்குகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸில் இருந்து 6 எம்எல்ஏகக்ள் விலகினர். அவர்களில் 3 பேர் பாஜகவில் இணைந்தனர். அகமது படேலின் வெற்றியைத் தடுக்கவே எம்எல்ஏக்களை பாஜக அணி மாறச் செய்து வருவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement