சீனாவில் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
சீனாவின் உகான் நகரத்தைச் சேர்ந்த ஜூ நஜுவான் என்ற 59 வயது பெண், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, வயதான தோற்றத்தில் இருந்து இளம்பெண் தோற்றத்திற்கு மாறியுள்ளார். ஆனாலும் போலீஸார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “ஜூ நஜுவான் தனது சொந்த காரணங்களுக்காக 3.7 மில்லியன் டாலர் கடனாக பெற்றுள்ளார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கடனை திருப்பி தரும்படி உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார். அதன் பின்னர் அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். அவர் ஏற்கனவே அளித்த போட்டோவில் இருப்பதை விட இப்போது மிகவும் இளமையாக 30 வயது தோற்றத்தில் காட்சியளிக்கிறார்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஜூ நஜுவான் மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி ரயிலில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்காக, கடன் அட்டைகள் மூலம் மீண்டும் கடன் பெற்றிருப்பதாகவும், அந்த தொகையையும் செலுத்தவில்லை என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். நாடு முழுவதும் இதுபோன்று கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். ‘கிரிடிட் சொசைட்டி’ என்ற முறையை அறிமுகப்படுத்திய பிறகுதான் இது போன்ற தவறுகள் நடைபெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்