போதைப் பொருள் விவகாரம்; டோலிவுட்நடிகர் ரவி தேஜாவின் ஓட்டுநரிடம் விசாரணை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போதைப்பொருள் விவகாரத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் ரவி தேஜாவின் ஓட்டுநர், சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜராகியுள்ளார். 


Advertisement

தடைசெய்யப்பட்ட வலைதளம் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்ட விவகாரம் தெலுங்கு திரை உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. முன்னணி நடிகர், நடிகையர், இயக்குநர் உள்ளிட்டோர் விசாரணைக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் நேற்று நடிகர் ரவிதேஜா நேரில் ஆஜரானார். அவரிடம் பத்து மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரவிதேஜாவின் கார் ஓட்டுநர் சீனிவாசன், சிறப்பு விசாரணைக்குழு முன் இன்று ஆஜரானார். அவரிடம் விசாரணைக்குழு தீவிர விசாரணை நடத்தியது. 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement