தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு பின்தங்கிய கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள்‌ தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.


Advertisement

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள்‌ தரவரிசை பட்டியலில் இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 852 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இரண்டு இடங்கள் முன்னேற்றம் கண்டு 880 புள்ளிகள் பெற்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள்‌ தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த தென்னாப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் 861 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 14ஆவது இடத்தில் இருந்து 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சிறந்த அணிக்கான தரவரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், தென்னாப்ரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்திய அணி 3ஆவது இடத்திலும் தொடர்கின்றன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement