[X] Close

“மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி” -கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சாஹா

Subscribe
Feeling-Great-to-be-back-with-family-says-Indian-Wicket-Keeper-Batsman-Wriddhiman-Saha-who-recently-recovered-from-the-COVID19

மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாஹா. அதனை உற்சாகத்துடன் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் சாஹாவும் இடம் பெற்றுள்ளார். 


Advertisement

ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருந்தார் அவர். பயோ பபுளில் இருந்த வீரர்களில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு ஆளான வீரர்களில் சாஹாவும் ஒருவர். அதையடுத்து அவர் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். 


Advertisement

அதையடுத்து தற்போது கொல்கத்தாவில் உள்ள குடும்பத்தினருடன் பொழுதை இனிதாக செலவழித்து வருகிறார். வரும் ஜூன் 2ஆம் தேதியன்று மும்பையிலிருந்து இந்திய அணி இங்கிலாந்து செல்ல உள்ளது. அதற்கு முன்னதாக குடும்பத்தினரை சந்திக்க சாஹா விரும்பியதால் அவரது விருப்பத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கி உள்ளதாக தெரிகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close