[X] Close

மீரட் சோகம் : கொரோனாவால் உயிரிழந்த இரட்டை சகோதரர்கள்

Subscribe

உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் இரட்டை சகோதரர்கள் கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர்களான ஜார்ஜரி ரேமண்ட் மற்றும் சோஜா இருவரும், பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதசே மாநிலம் மீரட்டுக்கு குடிபெயர்ந்தனர். இவர்களுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு, ஒரே பிரசவத்தில் இரு மகன்கள் பிறந்தனர். கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் படித்த இருவரும் தற்போது, இருவேறு இடங்களில் பணியாற்றி வந்தனர். கடந்த மாதம் மீரட் வந்த ஜோப்ரெட் மற்றும் ரால்ஃப்ரெட் இருவரும் கடந்த 23 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

திடீரென இருவருக்கும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா உறுதியான நிலையில், ஒரு நாள் இடைவெளியில் இரு சகோதரர்களும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சில நிமிட இடைவெளியில் பிறந்த இருவரும் ஒரு நாள் இடைவெளியில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close