[X] Close

கொரோனாவை வென்ற நாடுகளில் அலர்ட்: குழந்தைகளை தாக்கும் உருமாறிய கொரோனா!

Subscribe
Alert-in-countries-that-have-won-the-COVID19-the-transformed-that-attacks-children

கொரோனாவை வென்ற பல உலக நாடுகளிலும், தற்போது குழந்தைகளுக்கு தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மூன்றாவது அலையின் போது, இந்தியாவிலும் குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதால், விரைவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உலக நாடுகள் எச்சரித்துள்ளன.


Advertisement

கொரோனா காலகட்டத்தில் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது சிங்கப்பூர். ஆனால். அதற்கு எதிர்மறையாக தற்போது சிங்கப்பூரின் நிலை மாறியுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவைகளால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த சிங்கப்பூரில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. 

சிங்கப்பூரில் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவாக, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, உருமாற்றம் அடைந்த கொரோனா குழந்தைகளை அதிகம் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படுவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் பாடங்களை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.


Advertisement

அடுத்ததாக கொரோனாவை கட்டுப்படுத்தி வெற்றி கண்ட தாய்வான் நாட்டிலும், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரைப் போலவே பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொரோனா பரவலை முற்றிலும் குறைத்த நாடு தாய்வான். ஆனால் தற்போது இங்கு உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் சுகாதாரத்துறை மீண்டும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக இங்கும் குழந்தைகளை கொரோனா அதிகம் பாதிப்பதால், அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஹாங்காங் நாட்டில் 4 வயதான குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் உருமாறிய கொரோனா குழந்தையை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.

பிரேசில் நாட்டை பொறுத்தவரை கொரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. இதுவரை ஐந்து வயதுக்குட்பட்ட 800க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.


Advertisement

பல உலக நாடுகளிலும் இது போல குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், இந்தியாவில் தற்போதே குழந்தைகளுக்கான படுக்கைகள் மற்றும் மருந்துகளை தயார் செய்வது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close