[X] Close >

பாஜக அலுவலகம் மீது தாக்குதல் - கேரளாவில் பதற்றம்

BJP-s-office-attacked-in-kerala

கேரளாவில் பா.ஜ.க.வினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நேற்றிரவு நடைபெற்ற மோதலில் பா.ஜ.க. மாநில அலுவலகம் சூறையாடப்பட்டது. மேலும் இரு கட்சி பிரமுகர்கள் வீடுகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


Advertisement

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பவுடிகோனம் பகுதியில் இரு கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில், நேற்று இரவு, இரு கட்சியினருக்கும் இடையே மறுபடியும் மோதல் வெடித்துள்ளது. இம்மோதல் சம்பவத்தில் பா.ஜ.க. மாநில அலுவலகத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் சூறையாடியுள்ளனர். 
இதையடுத்து, கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் வீட்டின் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து, முக்கிய கட்சி பிரமுகர்கள் வீடுகளில் மாறி மாறி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இந்த தொடர் சம்பவங்களால் கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close