பிங்க் நிற ரோஜா பூவுடன் பிரதமரை வரவேற்ற முதலமைச்சர் 

Chief-Minister-welcomed-to-Prime-Minister-with-pink-roses

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக மதுரை வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிங்க் நிற ரோஜாப் பூ கொடுத்து வரவேற்றார். 


Advertisement

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார். மதுரை வந்த பிரதமர் மோடியை இளஞ்சிவப்பு நிற ரோஜாப்பூவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். உள்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு யாரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பூவோ அல்லது புத்தகங்களோ கொடுத்து வரவேற்கலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் பிங்க் நிற ரோஜா பூ கொடுத்து எடப்பாடி பழனிசாமி மோடியை வரவேற்றுள்ளார்.

அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் பேக்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அயோத்தி - ராமேஸ்வரம் இடையிலான புதிய ரயில்சேவையையும் தொடங்கிவைத்தார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement