[X] Close

தேர்தலுக்கு பின் தொடர்ச்சியாக விலை உயர்வு - ராஜஸ்தானில் 102 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை!

Subscribe
Petrol-hits-102L-in-Rajasthan-101-86-in-MP-after-4th-straight-hike

ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை 102 ரூபாயைக் கடந்துள்ளது. 


Advertisement

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தப்படு வருகின்றன. தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்தது. பெட்ரோல் விலை இன்று லி்ட்டருக்கு 29 பைசாவும், டீசல் 31 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டர் 102.15 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. மத்தியப்பிரதேசம், அனுப்பூரில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.86 ஆகவும், மகாராஷ்டிராவில் பர்பானியில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.95 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் 2-வது முறையாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100க்கு அதிகமாக செல்கிறது. இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது.


Advertisement

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close