[X] Close

“கொரோனாவை வீழ்த்த தடுப்பூசி தான் ஒரே தீர்வு!” - முதல் டோஸ் போட்டுக் கொண்ட தவான்!

Subscribe
Indian-Cricket-Team-Opening-Batsman-Shikhar-Dhawan-vaccinated-for-COVID19-today-and-he-shares-the-picture-and-thanked-frontline-warriors

“கொரோனாவை வீழ்த்த தடுப்பூசி தான் ஒரே தீர்வு!” - முதல் டோஸ் போட்டுக் கொண்ட தவான்!


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்டார். அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிகக்க சிறப்பாக விளையாடி இருந்தார் தவான். அதோடு ஆக்ஸிஜன் வாங்க நிதியுதவியும் அவர் வழங்கி இருந்தார். 

“தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். முன்கள பணியாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. முடிந்த வரை எந்தவித தயக்கமும் இல்லாமல் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அது தான் கொரோனாவை நாம் வீழ்த்த பெரிதும் உதவும்” என அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

இந்தியாவில் கொரோனா பரவலின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பயோ பபுளில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட போதும் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close