[X] Close

புதுக்கோட்டை: இரு வேறு பாலியல் வழக்குகளில் இளைஞர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை!

Subscribe
Life-imprisonment--for-youth-in-two-different-sex-cases-

புதுக்கோட்டையில் இரு வேறு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டைகளை வழங்கி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Advertisement

மச்சுவாடி நரிமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் 2019 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்தது, கருக்கலைப்பு செய்தது, சிறுமியின் தாயாருக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட காரணங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அதேபோல், விராலிமலை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜீவ் காந்தி என்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.


Advertisement

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close