பீகார் மாநில அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. லாலு பிரசாத்துடனான மோதலில் நேற்று மாலை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், இன்று காலை மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இவருடன் பாரதிய ஜனதா கட்சியின் சுஷில் மோடி துணை முதலமைச்சராக பதவியேற்கிறார். லஞ்ச ஊழலுக்கு எதிராக நிதிஷ் குமார் எடுத்த முடிவை வரவேற்பதாக பிரதமர் மோடியும் பாராட்டியிருந்தார்.
நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் போர்க்கொடி தூக்கியுள்ளார். பேரவையில் தனிப்பெரும் கட்சி என்ற வகையில் தங்களையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து தேஜஸ்வி மற்றும் 5 ராஷ்ட்ரீய ஜனதாதள எம்எல்ஏக்களை பேச்சு வார்த்தை நடத்த ஆளுநர் திரிபாதி அழைத்தார். இதைத் தொடர்ந்து தேஜஸ்வி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி நள்ளிரவில் பேரணியாக சென்றனர்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?