[X] Close

"ஒற்றைத் தவணை தடுப்பூசியே போதிய எதிர்ப்பாற்றலை தருகிறது" - ஆய்வுகளில் தகவல்

Subscribe
Research-says--One-dose-vaccination-is-enough-to-protect-those-who-already-infected-by-Coronavirus

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசியே புதிய உருமாறிய தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு தருவதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது. பிரிட்டன், பிரேசில், தென்னாப்ரிக்கா, இந்தியா என எந்த வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்தும் ஒற்றை தவணை தடுப்பூசியே பலன் தருவதாகவும், ஆனால் அத்தடுப்பூசி போடப்பட்டவர்கள் ஏற்கெனவே தொற்றிலிருந்து குணமடைந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்படாதவர்களுக்கும் ஒற்றைத் தவணை தடுப்பூசி சற்றே குறைந்த எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வுகள் ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டவர்களை கொண்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close