[X] Close

நாமக்கல்: வயிற்றிலேயே இறந்த 14 வயது சிறுமியின் குழந்தை: மணந்த நபர் போக்சோவில் கைது

Subscribe
Namakkal-The-child-of-a-14-year-old-girl-who-died-in-the-womb--Her-husband-was-arrested-in-Pokso

ராசிபுரம் அருகேயுள்ள மங்களபுரத்தில் 7 மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமியை சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்த்தபோது குழந்தை உயிரிழந்துள்ளது. சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அவரது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய உறவினர்கள் 4 பேர் தலைமறைவாகினர்.


Advertisement

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த உரம்பு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஆண்டி என்பவரது மகன் லாரி டிரைவர் கோவிந்தராஜ் (25) என்பவருக்கு பெரியோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணி சிறுமி வயிற்றுவலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமி வயிற்றில் இருந்த 7 மாத குழந்தை இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மங்களபுரம் காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக டிரைவர் கோவிந்தராஜை போக்சோ சட்டத்தின் கைது செய்து திருமணத்திற்கு உடந்தையாக இருந்த இருவீட்டு பெற்றோர்கள் 4 பேரை தேடிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close