[X] Close

சேலம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் கைது

Subscribe
Salem-A-youth-who-sexually-abused-and-killed-a-girl-has-been-arrested

ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் அருகே நுங்கு வெட்டித் தருவதாக காட்டிற்குள் அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி படுகொலை செய்யப்பட்டார். தப்பியோடிய இளைஞரை தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.


Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் ஒன்றியம் தெசவிளக்கு ஊராட்சியில் மாட்டையாம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர் தன்பால், விசைத்தறி கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 1-ம் தேதி மாலை தனபால், வீட்டின் அங்கே விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமியை, தனியாக அழைத்துள்ளார். அவர் வராத நிலையில், பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.

image


Advertisement

அங்கு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து சிறுமி வலிதாங்க முடியாமல் சத்தம்போட்டதை தொடர்ந்து, சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன், தலையில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலை குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பியோடிய தனபாலையும் தேடி வந்தனர்.

image

இதையடுத்து கிராம பகுதியில் தலைமறைவாக சுற்றி திரிந்த தனபாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து தனபாலை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.


Advertisement

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close