[X] Close

RCB vs PBKS : டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு!

Subscribe
Punjab-Kings-Versus-Royal-Challengers-Bangalore-plays-in-the-league-match-number-of-the-IPL-2021-at-Ahmedabad-Narendra-Modi-Stadium-and-RCB-won-the-toss-elected-to-bowl-first

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதனால் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்கிறது. 

கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் நடப்பு சீசனில் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. பெங்களூரு அணி 5 வெற்றிகளையும், பஞ்சாப் அணி 2 வெற்றியையும் வசப்படுத்தி உள்ளன. 


Advertisement

இவ்விரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் இதுவரை 26 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் பெங்களூரு 12 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றிப் பாதைக்கு திரும்பும் வேட்கையில் பஞ்சாப் அணியும், ஆறாவது வெற்றிக்கான முனைப்பில் பெங்களூரு அணியும் இன்றைய போட்டியில் களம் காண்கின்றன.


Advertisement

ஆடும் லெவன் விவரம்... 

பஞ்சாப் கிங்ஸ் 

கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெயில், தீபக் ஹுடா, பூரன், பிரப்சிம்ரன் சிங், ஷாருக் கான், கிறிஸ் ஜோர்டன், ஹர்ப்ரீத் பிரார், ரவி பிஷோனி, முகமது ஷமி, மெரிடித். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 

விராட் கோலி (கேப்டன்), படிக்கல், பட்டிதர், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷபாஸ் அகமது, டேனியல் சாம்ஸ், கைல் ஜெமீசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சாஹல்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close