திருச்சி மாவட்டத்தில் இறந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய இடம் கிடைக்காமல் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு இரவு முழுவதும் பேரன் அலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள நெடுஞ்சலக்குடி ஊராட்சியில் வசித்துவந்தவர் மேரியம்மாள். இவர் திடீரென உயிரிழந்ததையடுத்து, அவரது பேரன் முருகேசன் தள்ளுவண்டியில் பாட்டியின் உடலை வைத்துக் கொண்டு தகனம் செய்ய இடம் தேடி அலைந்திருக்கிறார். யாரும் இடம் கொடுக்க முன் வராத நிலையில் வள்ளிவாயல் சுடுகாட்டில் கரும்பு சருக்கைகளை கொண்டு பாட்டியின் சடலத்தை முருகேசன் எரித்துள்ளார்.
சந்தேகமடைந்த கிராம மக்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் லால்குடி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தள்ளுவண்டியுடன் முருகேசனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து காவலர்கள் பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை முழுமையாக தகனம் செய்தனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?