[X] Close

‘சென்ற வருட மோசமான தோல்வியும், நடப்பு ஐபிஎல் தொடர் வெற்றியும்’ - தோனி கொடுத்த விளக்கம்

Subscribe
MS-Dhoni-Sums-Up-Reason-Behind-Chennai-Super-Kings-Resurgence-In-IPL-2021

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாடுகிறார்கள் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரவித்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடர் இந்தாண்டு சிஎஸ்கே தான் இதுவரை பங்கேற்ற 6 ஆட்டங்களில் 5 இல் வெற்றிப்பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதிலும் தான் சந்தித்த முதல் போட்டியில் டெல்லியுடன் தோல்வியடைந்த பின்பு விஸ்வரூபம் எடுத்த சிஎஸ்கே 5 தொடர் வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது. டெல்லியில் நேற்று ஹைதராபாத் உடனான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 172 ரன்களை சேஸ் செய்து அசத்தல் வெற்றியை பெற்றது.

image


Advertisement

இது குறித்து போட்டி முடிந்த பின்னர் பேசிய கேப்டன் தோனி, "கடந்தாண்டு தோல்வியும் இந்தாண்டு இதுவரை கிடைத்த வெற்றிக் குறித்து கூறுவது சிரமம். ஒவ்வொரு ஆண்டும் 11 கொண்ட வீரர்கள் சில நேரங்களில் சரியாக அமையும், சில நேரங்களில் அமையாது. அதனால் தொடரின் தொடக்கத்திலேயே இந்த விஷயத்தை சரி செய்துவிட வேண்டும். நாங்கள் கடந்த முறை 5 முதல் 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை. ஏன் பயிற்சியை மேற்கொள்வதற்கு கூட சிரமமாக இருந்தது. அதன் பின்பு பயோ பபுள் பாதுகாப்பு, தனிமைப்படுத்துதல் என நிறைய இருக்கிறது" என்றார்.

image

மேலும் "மொத்தமாக பார்த்தால் இந்தாண்டு வீரர்கள் அனைவரும் கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு வீரர்களிடம் இருந்தும் கூடுதலாக 10 சதவிதம் அதிக திறன் வெளிப்படுவதாக நினைக்கிறேன். அதனால் ஒட்டுமொத்தமாக அணி சிறப்பாக செயல்படுகிறது. அணியின் பேட்டிங் பிரமாதமாக இருக்கிறது. அதனால் பவுலிங்கை நான் குறைத்து கூறவில்லை. அதுவும் சிறப்பாக இருக்கிறது. நேற்றையப் போட்டியில் பிட்ச் அருமையாக இருந்தது. டெல்லியில் இப்படி ஒரு ஆடுகளத்தை நான் எதிர்பார்க்கவில்லை" என்றார் தோனி.


Advertisement

தொடர்ந்து பேசிய அவர் "இந்த களத்தில் பந்து சிறப்பாக வந்தது. ஆனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒன்றுமில்லை. மிக முக்கியமாக மைதானத்தில் ஈரப்பதம் இல்லை. 170 ரன்கள் ஈரப்பதம் இல்லையென்றால் குறைவான ஸ்கோராகவே நாங்கள் நினைத்தோம். ஆனாஸ் தொடக்க வீரர்கள் மிக பிரமாதமாக விளையாடினார்கள்" என்றார் தோனி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close