[X] Close

வார்னர் - மனிஷ் பாண்டே பலமான கூட்டணி! சென்னை வெற்றி பெற 172 ரன்கள் தேவை!

Subscribe
Chennai-Super-Kings-required-172-Runs-to-win-the-League-Match-Number-23-of-the-IPL-2021-against-Sunrisers-Hyderabad

வார்னர் - மனிஷ் பாண்டே பலமான கூட்டணி! சென்னை வெற்றி பெற 172 ரன்கள் தேவை!


Advertisement

நடப்பு ஐபிஎல் சீசனின் 23வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது. இருபது ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது ஹைதராபாத் அணி. 

வார்னர் மற்றும் பேர்ஸ்டோ அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாம் கரன் வீசிய நான்காவது ஓவரில் பேர்ஸ்டோ 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். 


Advertisement

தொடர்ந்து மனிஷ் பாண்டே களத்திற்கு வந்தார். கேப்டன் வார்னருடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர். 


Advertisement

14வது ஓவரில் பாண்டே 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். அதே போல வார்னர் 16வது ஓவரில் 39 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார்.

18வது ஓவரில் லுங்கி இங்கிடி, சென்னைக்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்த வார்னரை வீழ்த்தினார். அதனால் கேன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். அதே ஓவரில் மனிஷ் பாண்டே 61 ரன்கள் எடுத்த நிலையில் பெரிய ஷாட் ஆட முயன்று டூப்ளெசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்சால் ஆட்டம் இழந்தார். 

அதனால் கேதர் ஜாதவ் கிரீசுக்கு வந்தார். வில்லியம்சன் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுப்பட்டார்.  

சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 172 ரன்கள் தேவை. இதனையடுத்து சென்னை அணி 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. சென்னை அணிக்காக ருத்ராஜ் கெய்க்வாட், டுபிளசிஷ் சிறப்பான தொடக்கம் அமைத்து விளையாடினர். 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி சென்னை 63 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளசிஸ் 33, கெய்க்வாட் 29 ரன்கள் எடுத்தனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close