[X] Close

டிவில்லியர்ஸ் அதிரடி! டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூர்

Subscribe
Delhi-Capitals-required-172-runs-to-win-match-against-Royal-Challengers-Bangalore-of-IPL-2021-League-Match-Number-22-of-the-Season-at-Narendra-Modi-stadium

டிவில்லியர்ஸ் அதிரடி! டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூர்!


Advertisement

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனில் 22வது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. 

கேப்டன் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கோலி மற்றும் படிக்கல் பவர் பிளே ஓவர்களில் அடுத்தடுத்த பந்துகளில் கிளீன் போல்ட்டாகி வெளியேறினர். அவர்களை ஆவேஷ் கான் மற்றும் இஷாந்த் ஷர்மா வீழ்த்தி இருந்தனர். 


Advertisement

மேக்ஸ்வெல் 25 ரன்கள் எடுத்து மிஸ்ரா சுழலில் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் ராஜாத் பட்டிதர் 22 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். 


Advertisement

பெங்களூர் அணியின் பேட்டிங் பில்லர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் தனி ஒருவராக மொத்த பொறுப்பையும் தனது தோளில் சுமந்து கொண்டு விளையாடினார். 

42 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும் இறுதியில் தன்னுடைய 360 டிகிரி பாணியில் சரவெடியாக வெடித்து ரன்களை குவித்தார். வாஷிங்டன் 6 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

டெல்லி அணி 20 ஓவர்களில் 172 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close