[X] Close

“எப்படி திரும்பி செல்வது என்ற கவலை வேண்டாம்” - வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் விளக்கம்

Subscribe
BCCI-will-take-care-of-the-safe-return-of-players-after-the-IPL-series-Concludes-says-IPL-Chief-Operating-Officer-Hemang-Amin-mid-of-COVID19-fear

ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு அனைத்து வீரர்களும் பத்திரமாக அவரவர் வீடு திரும்புவதற்கான நடவடிக்கையை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என ஐபிஎல் சிஓஓ ஹேமங் அமின் கடிதம் மூலமாக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வந்த வீரர்களான அஷ்வின், ஆடம் சாம்பா, ஆண்ட்ரூ டை மாதிரியானவர்கள் தொடரிலிருந்து விலகி உள்ளனர்.

image


Advertisement

அதே நேரத்தில் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் சிலரும் தங்கள் நாட்டுக்கு திரும்புவது எப்படி என்ற ஏக்கத்தில் இருந்தனர். அதனை மும்பை இன்டியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர் கிறிஸ் லின்னும் தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கான இந்திய வான்வழி போக்குவரத்தை ஆஸ்திரேலியா தடை செய்துள்ள நிலையில் இதனை அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் வீரர்கள் ஐபிஎல் இந்த உத்தரவாதத்தை கொடுத்துள்ளது. 

image

“நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்ததும் ‘நாம் எப்படி வீட்டுக்கு திரும்புவோம்?’ என்ற அச்சம் உங்களில் பலருக்கு இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். உங்களது உணர்வு எங்களுக்கு இயல்பானது. நீங்கள் அது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். ஒவ்வொரு வீரரும் அவரவர் வீடு திரும்புவதை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்ற உத்தரவாதத்தை நாங்கள் தருகிறோம். தொடர் முடிந்ததும் உங்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அந்த கடிதத்தில் ஹேமங் அமின் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close