பாஜக உடனான உறவு வெறுப்பூட்டுகிற வகையில் மாறிவிட்டதாகவும், வரும் மகாராஷ்ட்ரா உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் சிவசேனா அறிவித்துள்ளது.
மும்பையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே, 50 வயது நிரம்பிய சிவசேனா கட்சி, கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக பாரதிய ஜனதாவுடன் கொண்டிருந்த உறவு வெறுப்பூட்டுகிற வகையில் மாறிவிட்டதாகக் தெரிவித்தார். ஹிந்துத்துவா பிரச்னைகளில் பாரதிய ஜனதாவுக்கு சிவசேனா தொடர்ந்து ஆதரவு நல்கி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும், சிவசேனா பதவி மீது பேராசை கொண்ட கட்சி அல்ல என்று கூறியுள்ள உத்தவ் தாக்ரே, தங்களை குறைத்து மதிப்பிடுபவர்கள் நிச்சயம் தோற்றுப் போவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். தனது முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
Loading More post
"ஈம சடங்கு நிகழ்ச்சிக்காவது அனுமதி கொடுங்க” - தெருக்கூத்துக் கலைஞர்கள் கோரிக்கை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?