[X] Close

KKR vs PBKS : டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு!

Subscribe
Kolkata-Knight-Riders-Versus-Punjab-Kings-plays-at-Match-number-21-of-the-IPL-2021-at-Narendra-Modi-Stadium-Ahmedabad-and-KKR-won-the-toss-elected-to-bowl-first

நடப்பு ஐபிஎல் சீசனின் 21வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதனால் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்கிறது. 


Advertisement

இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் இதுவரை 27 முறை நேருக்கு நேரு மோதி உள்ளன. அதில் பஞ்சாப் 9 போட்டிகளிலும், கொல்கத்தா 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி முதல் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது. 

image


Advertisement

மறுபக்கம் பஞ்சாப் அணி 5 போட்டிகளில் 2 வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close