[X] Close

வெறித்தனம் காட்டிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா: மேட்ச் வின்னிங் பர்ஃபாமென்ஸில் கலக்கல்!

Subscribe
All-Rounder-Ravindra-Jadeja-Match-winning-Performance-helps-Chennai-Super-Kings-to-win-the-Matches-in-IPL-2021

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது அணிக்காக மேட்ச் வின்னிங் பர்ஃபாமென்ஸை டெலிவர் செய்துள்ளார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து டிபார்ட்மெண்டிலும் நான் ஒரு மாஸ்டர் என சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது அவரது ஆட்டம். சென்னை அணியின் துருப்பு சீட்டாக அவர் திகழ்ந்து வருகிறார். அதுவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஒற்றை ஆளாக சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார் அவர். 


Advertisement

image

ஐந்து போட்டிகளில் நான்கு முறை பேட் உடன் கிரீசுக்கு வந்த அவர் மூன்று முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக அவுட்டாகாமல் இருந்துள்ளார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். மொத்தமாக நான்கு இன்னிங்ஸையும் சேர்த்து 102 ரன்களை அவர் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ரன்கள் 62 நாட் அவுட். பெங்களூர் அணிக்கு எதிராக வெறும் 28 பந்துகளில் இந்த ரன்களை அவர் எடுத்திருந்தார்.


Advertisement

மறுபக்கம் பவுலராக 5 போட்டிகளில் மொத்தமாக 18 ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதுவும் பெங்களூர் அணிக்கு எதிராக நான்கு ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்துள்ளார். அதில் வாஷிங்டன், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என மூவரையும் வீழ்த்தி இருந்தார். அதோடு டேனியல் கிறிஸ்டியனை டைரக்ட் ஹிட் செய்து ரன் ஆவுட்டும் செய்திருந்தார். மேலும் ஃபீல்டராக 7 கேட்ச்களையும் நடப்பு சீசனில் பிடித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு கேட்ச்களையும் பிடித்திருந்தார். அவரது மேட்ச் வின்னிங் பர்ஃபாமென்ஸ் மூலமாக சென்னை அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்து வருகிறார் ஜடேஜா. 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close