[X] Close

தொழிலதிபர் மீது வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை - செங்கல்பட்டில் பயங்கரம்

Subscribe
chengalpattu-business-man-murder

செங்கல்பட்டு அருகே தொழில் போட்டி காரணமாக தொழிலதிபர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமாறன். அதிமுக பிரமுகரான இவர் தனியார் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை நியமித்தல், இரும்புக் கழிவு விற்பனை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வந்தார். தொழில் போட்டியில் பல்வேறு முன்விரோதங்கள் கொண்ட இவரை இருமுறை கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஆனால் நல்வாய்ப்பாக அவர் அதிலிருந்து தப்பிவிட்டார். அதனைத்தொடர்ந்து திருமாறன் தனக்கு துப்பாக்கி ஏந்திய காவல்பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் அவரின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய காவலர் நியமிக்கப்பட்டார்.

image
இன்று திருமண நாள் என்பதால் திருமாறன் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பு காவலர் எழிலரசன் என்பவருடன் ரயில் நகர் பகுதியில் உள்ள செல்வ முத்துக்குமாரசாமி ஆலயத்திற்கு சென்றார். வழிபாடு செய்து விட்டு கோயிலை விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திருமாறன் மீது வெடிகுண்டு வீசிஅரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த திருமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Advertisement

image

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு காவலர் எழிலரசன் என்பவர் கும்பலின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு நபர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த 19 வயது இளைஞர் சுரேஷ் என்பவர் மீது எந்த வழக்கும் இல்லை. இவர் புதிதாக கூலிப்படையில் சேர்ந்திருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் 6 முறை துப்பாக்கியால் சுட்டு உள்ளார். கோயில் வளாகத்துக்குள் தோட்டாவின் குப்பிகளை காவலர்கள் தேடி வருகிறார்கள். இந்த கொலை வழக்கு தொடர்பாக 6 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close