[X] Close

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் ? - மருத்துவர்களின் அறிவுரை!

Subscribe
What-foods-should-be-taken-to-protect-against-corona-Physicians-advice

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை வெல்ல தடுப்பூசி பேராயுதமாக பார்க்கப்பட்டாலும் அதனுடன் நமது உணவு, வாழ்கை சார்ந்த பழக்க வழக்கங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை நம்மை காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஆகையால் இவை குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இந்தக்கட்டுரையில் காணலாம்.


Advertisement

பால முருகன் - ஆயுர்வேத மருத்துவர்

இந்து காந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த மருந்து நமது ஜீரணசக்தியை மேம்படுத்தி, உடலை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயூஷ் குடிநீர், ஆயூஷ் குவாதம் மருந்துகளையும்  உபயோகிக்கலாம்.


Advertisement

உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த எடுத்துக்கொள்ள வேண்டியவை:

உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த கற்பூராதி சூரணம், சுவானந்தா குளிகை உள்ளிட்ட மருந்துகளை மருத்துவர்களின் அறிவுரையின் படி எடுத்துக்கொள்ளலாம்.

image


Advertisement

 எலுமிச்சை, இஞ்சி, தேன் கலவையை எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை வெந்நீரால் வாய் கொப்பளிக்கலாம். முக்கியமாக பயம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

டாக்டர் காமராஜ் : மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்

மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை. முன்பு போல மக்கள், கொரோனா தொற்றை தடுக்கும் கபசுர குடிநீர், நெல்லிக்காய் லேகியம், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்ட மருத்துகளை இணை உணவுகளாக எடுத்துக்கொள்வதில்லை. இன்றைக்கு நாம் முன்னெடுத்திருக்கும் உணவு மற்றும் வாழ்கை முறைகளை மாற்றிக்கொண்டாலே நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது.

அறிகுறிகளும் - அதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளும்

1. காய்ச்சல், உடல்சோர்வுக்கு நிலவேம்பு குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. சளி, இருமல் இருக்குமானால் அரசு வழிகாட்டுதலின் படி கபசுர குடிநீர் எடுத்துக்கொள்ளலாம்.

image

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் லேகியம், அமுக்ரா சூரணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. காய்ச்சல் இருந்தால் சாந்த சந்த்ருயா மாத்திரை அல்லது பிரம்மானந்த பைரவ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

இளைஞர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

இளைஞர்கள் இரவு அதிகம் நேரம் விழித்திருக்கிறார்கள், காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். இந்த நடைமுறைகள் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். 

எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:

இது கோடை காலம் என்பதால் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். கூழ் வகைகள், அதிகளவு மோர், எலுமிச்சை ஜீஸ். நெல்லிக்காய் ஜூஸ், காய்கறி சூப் , கீரை சூப் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல உணவில் ஆறுசுவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

image

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, மாதுளை ஆகியவற்றின் கலவை, நெல்லிக்காய், மாதுளை கலந்த கலவை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். இவை மூலம் நமக்கு இழந்த ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும்.  

பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர் பழனி முருகன்:

வித்தியாசமான அறிகுறிகள்: 

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு போல் அறிகுறிகள் தென்படுவதில்லை. முன்பு கொரொனா அறிகுறிகளாக சளி, இருமல், உடல்வலி, காய்ச்சல் உள்ளிட்டவைச் சொல்லப்பட்டன. ஆனால் தற்போது தொடர்காய்ச்சல், மூக்கிலிருந்து நீர் ஒலுகுதல் உள்ளிட்ட குறிகள் தென்படுகின்றன.

இன்னும் சிலருக்கு தொடர் இருமல் மட்டும் ஒருவார காலத்திற்கு இருக்கிறது. சிலருக்கு கடுமையான உடல்வலி மட்டும் இருக்கிறது. மற்ற சிலருக்கு தொடர் வயிற்றுப்போக்கு மட்டும் ஏற்படுகிறது.

image

இவைத்தவிர வாதம் சம்பந்தமான அறிகுறிகள் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. ஆகையால் இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோனை செய்துகொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று வீரியம் கணக்கிடப்படும் முறை:

கொரோனா தொற்று மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. இதை கைவிரலின் தமனிகளில் உள்ள ஆக்ஸிஜன் அளவை வைத்து அளவிடுகிறார்கள். அந்த அளவு 94 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால், தொற்று ஏற்பட்டவருக்கு கொரோனா தொற்றின் வீரியம்குறைவாக இருக்கிறது என அர்த்தம். 

image

அவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்பவர்களுக்கு 6 நிமிட நடைபயிற்சி சோதனை மேற்கொள்ள வேண்டும். அதாவது 6 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்ட பின்னர், தமனிகளின் ஆக்ஸிஜன் அளவு ஏற்கனவே அளவிடப்பட்ட அளவை விட 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்தால் அவர்களும் அடுத்தக்கட்ட சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். 94 சதவீதத்திற்கு கீழாக இருந்தால் உடனடியாக அடுத்தக்கட்ட சிகிச்சைக்குச் செல்ல வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close