[X] Close

விறுவிறுப்பாக செல்லும் ஐபிஎல் போட்டிகள் - இதுவரை டாப் 5 பவுலர்கள், பேட்ஸ்மேன்கள்

Subscribe
Top-five-Wicket-takers-and-Leading-Run-Scores-of-the-First-15-league-matches-of-the-IPL-2021

கொரோனா பரவலுக்கு இடையில் நடப்பு ஐபிஎல் சீசனில் வெற்றிகரமாக 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரையில் போட்டிகள் அனைத்தும் சென்னை மற்றும் மும்பை மைதானத்தில் நடந்துள்ளன. இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் டாப் பவுலகர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் யார்? யார்? என்ற விவரத்தை பார்க்கலாம். 


Advertisement

டாப் 5 பவுலர்கள்?

image


Advertisement

நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்ஸ்மேன்களுக்கு ஈடாக பவுலர்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திய பந்து வீச்சாளார்கள் வெளிநாட்டு நட்சத்திர பந்து வீச்சாளர்களுக்கு இணையாக அசத்தி வருகின்றனர். சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் நால்வர் இந்தியர்களே. பெங்களூரு அணிக்கு களமிறங்கிய 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷல் படேல் முதலிடத்தில் உள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு துருப்பாக விளங்கிய தீபக் சாஹர் 8 விக்கெட்டுகளுடன் இப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மும்பை அணியின் சுழற் பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் மற்றும் டெல்லியின் ஆவேஷ் கான் ஆகியோரும் தலா 8 விக்கெட்டுகளுடன் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளனர். கொல்கத்தாவின் ரசல் 7 விக்கெட்டுகளுடன் இப்பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளார்.

டாப் 5 பேட்ஸ்மேன்கள்?

image


Advertisement

ஐபிஎல்லில் இதுவரை 15 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் டெல்லியின் ஷிகர் தவன் 231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். பெங்களூரு அணியின் துருப்புச் சீட்டாக விளங்கும் மேக்ஸ்வெல் 176 ரன்களுடன், தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார். ஹைதராபாத்தை சேர்ந்த பேர்ஸ்டோவ் 173 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டு பிளசிஸ் 164 ரன்களுடனும், கொல்கத்தாவின் முன் வரிசை வீரர் நிதிஷ் ரானா 155 ரன்களுடனும் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close