[X] Close

"தோனிக்கு தான் என்ன செய்கிறோம் என்பது தெரியும்!" - டூப்ளசிஸ்

Subscribe
Dhoni-knows-what-he-is-doing--pleasure-to-play-under-him-says-Faf

தோனிக்கு தான் என்ன செய்கிறோம் என்பது தெரியும், அவரது தலைமையின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியானது என்று சிஎஸ்கே அணியின் ஸ்டார் தொடக்க வீரர் டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் 18 ரன்களில் கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது சிஎஸ்கே. இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்தார் கேப்டன் தோனி. தொடக்க வீரராக களமிறங்கி அசத்தலாக விளையாடிய டூப்ளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 95 ரன்களை குவித்தார். சிஸ்கே அணிக்காக எப்போதும் சிறப்பாக விளையாடும் டூப்ளசிஸ் மீது ரசிகர்கள் எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பார்கள்.

image


Advertisement

இது குறித்து பேசிய டூப்ளசிஸ் "இந்தப் போட்டியில் நாங்கள் மிகவும் எளிதாக விளையாடினோம். முந்தையப் போட்டியை விட இன்றையப் போட்டியில் என்னுடைய ஆட்டம் மேம்பட்டுள்ளது. ஒரு பேட்ஸ்மேன் அன்றைய நாளில் எந்த மனநிலையில் இருக்கிறோரோ அதற்கு ஏற்றார் போல கைகள் வேலை செய்யும். இந்தப் போட்டியிலும் எங்களுக்கு ஸ்பின்னர்கள் பெரிதாக கைகொடுத்தார்கள் என்றே நினைக்கிறேன். ஜடேஜா தன் பங்களிப்பை சரியாக செய்தார்" என்றார்.

image

மேலும் "ருதுராஜ் மிகவும் திறமையான இளம் வீரர். அவருடைய பேட்டிங் நுட்பம் அற்புதமானது. சிறியவர் போல தோற்றமளித்தாலும் அவருடைய சிக்ஸர்கள் ஷாட்டுகள் அபாரமானவை. தோனியின் தலைமை கீழ் பல ஆண்டுகள் விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான் ரசல் அதிரடியாக விளையாடியபோதும் தோனி நிதானமாகவே இருந்தார்" என்றார் டூப்ளசிஸ்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close