[X] Close

கொல்கத்தாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை! வீணான கம்மின்ஸின் அசத்தல் ஆட்டம்!

Subscribe
CSK-versus-KKR-played-at-league-match-number-15-of-the-IPL-2021-and-CSK-Won-the-match-by-18-runs-and-it-is-a-Nail-biter

நடப்பு ஐபிஎல் சீசனில் 15வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த சென்னை அணி இருபது ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை குவித்தது. 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா. 


Advertisement

அந்த அணிக்காக சுப்மன் கில் மற்றும் நித்திஷ் ராணா இன்னிங்ஸை தொடங்கியிருந்தனர். தீபக் சாஹர் வீசிய ஆட்டத்தின் நான்காவது பந்தில் டக் அவுட்டானார் கில். தொடர்ந்து சாஹர் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் நித்திஷ் ராணாவும் 9 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த ஓவரில் கொல்கத்தா கேப்டன் மோர்கன் மற்றும் சுனில் நரைனின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் சாஹர். இப்படியாக கொல்கத்தா அணியின் டாப் ஆர்டரை தகர்த்தார் தீபக் சாஹர்.  

தொடர்ந்து ராகுல் திரிபாட்டியை வீழ்த்தினார் லுங்கி இங்கிடி. இருந்தாலும் 81 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னைக்கு தோல்வி பயம் காட்டினர் ரசல் மாற்று தினேஷ் கார்த்திக் இணையர். ரசல் 22 பந்துகளில் 54 ரன்களை குவித்து சாம் கரன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 

தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும் 40 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் கொல்கத்தாவின் வெற்றிக்காக ஒற்றை ஆளாக போராடிக் கொண்டிருந்தார் கம்மின்ஸ். சாம் கரன் வீசிய 16வது ஓவரில் 30 ரன்களை விளாசினார் அவர். அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட மொத்தம் நான்கு சிக்ஸர்கள் அடித்திருந்தார். அது பார்ப்பதற்கு தோல்வியை அவ்வளவு ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது போல இருந்தது. மேலும் போட்டியில் கொல்கத்தாவிற்கு கம்பேக் கொடுத்தார் கம்மின்ஸ். 

அதன் பலனாக 23 பந்துகளில் அரை சதம் விளசினார் கம்மின்ஸ். 12 பந்துகளில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்களை எடுத்தது கொல்கத்தா. கடைசி ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று பிரசித் கிருஷ்ணா ரன் அவுட்டானார். அதனால் கம்மின்ஸின் போராட்டம் வீணானது. 

கொல்கத்தா 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை குவித்தது. கம்மின்ஸ் 34 பந்துகளில் 66 ரன்களை குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். 

சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அடுத்தடுத்த ஆட்டங்களிலும் வெற்றி நடை தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close