[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

தேடப்படும் குற்றவாளியாக இருந்த பெண்.. தாமாக வலையில் சிக்கிக் கொண்ட பரிதாபம்!

australia-culprit-arrest

ஆஸ்திரேலியாவில் ஆமி ஷார்ப் என்பவர் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்யபட்டு, போலீஸ் பிடியில் இருந்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில், போலீஸ் காவலில் இருந்து தப்பிய ஆமி, முகநூலில் அவரது புகைப்படத்தை அவரே வெளியிட்டு சிக்கி கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் 18 வயதான ஆமி ஷார்ப் என்பவர் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஆமி ஷார்ப் பிடிக்கும் முயற்சியில், போலீசார் அவரது புகைப்படங்களை சிட்னியில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்புச் செய்தனர். இதையடுத்து, அந்த தொலைகாட்சி முகநூல் பக்கத்தில் போலிசார் அளித்த ஆமியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், முகநூலில் தனது படத்தை பார்த்த ஆமி அந்த புகைப்படத்திற்கு முதல் கமெண்டை பதிவு செய்துள்ளார். அதில் இத்தகைய மங்கிய புகைப்படத்தை நீக்கும்படியும், அதற்கு பதில் தனது அழகான புகைப்படத்தை பதிவு செய்யும் படியும் கூறியுள்ளார். மேலும் அழகான புகைப்படத்தையும் அத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பதிவுக்கு 47,000 பேர் லைக் செய்துள்ளனர்.

மேலும் அந்த பதிவுக்கு ஒரு பெண் இனி குற்றவாளியை பிடிக்க இத்தகைய புது உத்தியை கையாலாம், குற்றவாளியின் மங்கிய புகைப்படத்தை வெளியிட்டால் அவர்களே சிக்கி கொள்வர் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்நிகழ்வுக்கு பின், ஆமி ஷார்ப் எந்த இடத்தில் தப்பி சென்றாரோ அதே இடத்தில் போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close