[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

'கறுப்பின மக்கள் மீது அக்கறையில்லாதவர்'.... ஹிலாரி மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

america-trump-accusation

ஹிலாரி கிளின்டன் சகிப்புத்தன்மை அற்றவர் என்றும் கறுப்பின மக்கள் மீது அக்கறையில்லாதவர் என்றும் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

மிசி சிப்பியில் நடந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளரான ட்ரம்ப், ஆப்ரிக்க அமெரிக்க மக்களை வாக்கு வங்கிகளாகவே ஹிலாரி பார்ப்பதாகவும், அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தருவது குறித்து சிந்திப்பது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பின மக்களுக்கு ஹிலாரி எதையும் செய்யப்போவதில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியினர் கறுப்பின மக்களின் உணர்வுகளை பயன்படுத்தி வெற்றி பெறுவது குறித்து மட்டுமே சிந்திப்பதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக கடந்த வாரத்தில் ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்ககக் கூடிய திட்டங்களைத் தான் அதிபராகப் பொறுப்பேற்ற பின்பு நிறைவேற்றுவேன் என்றும், தனக்கே அவர்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கேட்டுக்கொண்டிருந்தார். அதிபர் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளில் ட்ரம்ப் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றார். கறுப்பின மக்களில் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே ட்ரம்பிற்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close