[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக்கணிப்பில் முந்துகிறார் ஹிலாரி

hillary-clinton-s-edge-over-donald-trump-gets-less-comfortable

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக ஓஹியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டனுக்கு கூடுதல் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. குடியரசுக்கட்சியின் ட்ரம்பை விட ஹிலாரிக்கு 6 சதவீத ஆதரவு கூடுதலாக உள்ளது.

ஹிலாரிக்கு 46 சதவீதம் பேரும், ட்ரம்பிற்கு 40 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான பெண்கள் ஹிலாரிக்கே தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றொரு மாகாணமான அயோவாவில் இருவருக்கு சமமான ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது. இங்கு இருவருக்கு 40 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் மாகாணங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ஹிலாரியும், ட்ரம்பும் இணையான ஆதரவைப் பெற்றிருப்பது இந்த மாநிலத்தில் மட்டுமே. பெரும்பாலும் வயது அதிகம் உள்ள வாக்காளர்கள் ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இளைஞர்கள் மற்றும் கறுப்பின மக்கள் இடையே அவருக்கு ஆதரவு இல்லை. அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ட்ரம்பிற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close