[X] Close
JUST IN
உலகம் 23 Aug, 2016 02:53 PM

அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு: நாடு திரும்பும் ஆப்கான் அகதிகள்

afkhanisthan-refugees

பாகிஸ்தானில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பும் ஆப்கான் மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் வழங்க சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசித்து வரும் ஆப்கானிஸ்தான் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாத மத்தியில் இருந்து இதுவரையிலான கால கட்டத்தில் சுமார் 67 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆப்கானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக புலம்பெயர்வோருக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனவரியில் இருந்து இதுவரை நாட்டிற்கு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இவ்வாறு வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கித் தரும் நிலையில் ஆப்கான் அரசு உள்ளதாக தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் புலம் பெயர்வோருக்கான அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement:
Advertisement:
[X] Close