[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

கோடை விடுமுறையில் அதிபர் ஒபாமா

obama-celebrate-vocation

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பதவிக்காலத்தின் இறுதி கோடை விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்துடன் மார்த்தா வின்யார்ட் தீவுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் கோடை விடுமுறையாக அதிபர் ஒபாமா தனது குடும்பத்தினருடன் வின்யார்ட் தீவுக்கு சென்றுள்ளார். அவருடன் மனைவி மிசெல், மகள்கள் மலியா மற்றும் சாஷாவும் வின்யார்ட் தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு கோல்ஃப் விளையாட்டு மற்றும் புத்தக வாசிப்பில் ஒபாமா அதிக நேரத்தை செலவிடுவார் என தெரிகிறது.

மேலும், அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ள விருந்துகளிலும் ஒபாமா பங்கேற்கிறார். ஒபாமா குடும்பத்தினரை தவிர்த்து, அவர்களது செல்ல நாய்களும் வின்யார்ட் தீவுக்கு சென்றுள்ளன. வரும் 21-ம் தேதிவரை ஒபாமா விடுமுறையில் இருப்பார்.

அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close