[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல்....பிரான்ஸ் நாட்டை அழிக்க போவது நாங்களே!!!

terrorist-said-we-killed-france

பிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுக்கு பிரான்ஸ் நாட்டை அழிக்க போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி பிரான்ஸ் நாட்டிலுள்ள செயிண்ட் எடின்னே டு ரவ்ரே என்ற இடத்தில் உள்ள தேவாலயத்துக்குள் 2 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து அங்கிருந்த பாதிரியார், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் என 6 பேரை பிணைக்கைதிகளாக சிறை பிடித்து அதில் ஒரு பாதிரியாரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், தீவிரவாதிகள் இருவரை அங்கேயே சுட்டு கொன்றனர்.

இந்த சம்பவத்துக்கு பிண்ணனியில் இருந்தது யார்? என்ற வினா எழும் சமயத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளே இதை ஒப்புக்கொண்டனர். மேலும் அதில் ஒரு தீவிரவாதியின் பெயர் அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜீன் என்றும் தெரிய வந்தது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள மிரட்டல் செய்தியில்,‘காலங்கள் மாறி விட்டது, எங்கள் சகோதர, சகோதரிகள் படும் வேதனையை நீங்களும் அனுபவிப்பீர்கள். உங்கள் நாட்டை நாங்கள் அழிக்கப் போகிறோம்’என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தீவிரவாதத்தை கட்டுபடுத்த செயல்பட்டு கொண்டிருக்கும் பன்னாட்டு படைகளை அனுப்பியுள்ள நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கையில் கத்தியுடன் சென்று காண்போரை எல்லாம் குத்திக் கொல்லுங்கள் என்றும் அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜீன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close