டிக்டாக் செயலி பயனர்களின் தகவல்களை திருடி சீனாவுக்கு வழங்குவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மாணவி ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பைட் டான்ஸ் என்ற நிறுவனமே டிக்டாக் மற்றும் ஹலோ செயலிகளை நிர்வகித்து வருகிறது.
குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க பயனர்களின் தகவல்களை, அவர்களது அனுமதியில்லாமல் திருடி சீன சர்வர்களில் சேகரித்து வைப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிஸ்டி ஹாங் என்ற மாணவி தான் டிக்டாக்கை பதிவிறக்கம் செய்ததாகவும் ஆனால் எந்த கணக்கும் தொடங்கவில்லை என்றும் கூறுயுள்ளார். தான் டிக்டாக்கில் கணக்கே தொடங்காத நிலையில் தன்னுடைய தகவல்கள் டன்செண்ட் மற்றும் அலிபாபா ஆகிய இரண்டு சீன சர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறும் மிஸ்டி ஹாங், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்