[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் முயற்சி

in-turkey-the-military-attempted-to-seize-power

துருக்கியைக் கைப்பற்றி விட்டதாக, ராணுவ அதிகாரிகள் அந்நாட்டு அரசின் தொலைக்காட்சி‌ சேனலில் இதனை அறிவித்துள்ளனர்.

ஜனநாயகத்தை சீரழிக்கும் அரசிடம் இருந்து ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து துருக்கியின் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சமூக வ‌லைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புல்லில் ராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி‌ச் சண்டை நடைபெற்று வருகிறது.

விமானப்படையின் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளன‌ர். அதேபோல‌, ராணுவ வீரர்கள் 4 பேர் மற்றும் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய துருக்கி அதிபர் டயீப் எர்டோகன், ராணுவத்தின் நடவடி‌க்கை விரைவில் முறியடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ராணுவத்திற்கு எதி‌ராக மக்கள் அனைவரும் வீதியில் திரண்டு போராட வேண்டும் என்றும் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே, தற்போதைய அரசு ஆட்சியில் நீடித்து வருவதாக துருக்கி பிரதமர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close