[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

சாகா வரம் பெற்ற சாகச கலைஞன் - புரூஸ் லீயின் திரையும் வாழ்வும் 

bruce-lee-birthday-special-story

தற்காப்பு கலையை உலகிற்கு திரையின் மூலம் அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ. குறுகிய காலமே வாழ்ந்த இந்தக் கலைஞனின் பிறந்தநாள் இன்று. 

1940 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்ட பாடகருக்கும், ஜெர்மன் வம்சாவளி தாய்க்கும், அமெரிக்காவில் பிறந்தவர்தான் இந்தப் புரூஸ் லீ. சிறு வயதிலேயே சீன தற்காப்பு கலைகளை கற்று கொண்டார். மேற்கத்திய குத்துசண்டையையும் பாரம்பரிய குங் ஃபூவையும் கற்று தேர்ந்த புருஸ்-லீ, இரு கலைகளையும் இணைத்து புதுவிதமான ஒரு கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். தந்தையே ஒரு நாடக நடிகர் என்பதால் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு திரை வாய்ப்பு கிடைத்து. 

கோல்டன் கேட் கேர்ல் என்ற திரைப்படத்தில் குழந்தையாகவே புரூஸ் லீ காட்டப்பட்டிருப்பார். குழந்தை நட்சத்திரமாகவும் சிறுவனாகவும் ஏராளமான படங்களில் தோன்றியிருக்கிறார். 1964-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் லாங் பீச் பகுதியில் அவர் நிகழ்த்திய சாகசங்கள், அவரை ஹாலிவுட் நோக்கி அழைத்துச் சென்றன. ஐந்து அடி 8 அங்குல உயரம் கொண்டிருந்த புரூஸ் லீயின் உடல் திறன் வியக்கத் தக்கது. கைகள் இயங்கும் வேகம், வலிமை போன்றவற்றில் புரூஸ் லீக்கு நிகராக சமகாலத்தில் வேறு யாரும் இல்லை என்று தற்காப்புக் கலை நிபுணர்கள் கூறுகிறார்கள். 

தீவிரமான பயிற்களின் மூலமாக தசையை வலிமையாக்குவது, உடலை மிக எளிதாக வளைப்பது, நெருக்கடியான தருணத்திலும் இதயத் துடிப்பைச் சீராக வைத்திருப்பது என பல வகையான திறன்களையும் பெற்றவர் புருஸ் லீ. 1964-ஆம் ஆண்டு Long Beach International Karate Championship போட்டியின் போது புரூஸ் லீ நிகழ்த்திய சாகசங்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தன. ஆள்காட்டி விரலை மட்டும் தரையில் ஊன்றியபடி, புஷ் அப்ஸ் பயிற்சியை அவர் மேற்கொண்டபோது பார்வையாளர்கள் அனைவரும் அதனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். One Inch Punch போன்ற மாறுபட்ட நுணுக்கங்களை லீ அறிமுகப்படுத்தியதும் இந்த நிகழ்வின்போதுதான். 1967-ஆம் ஆண்டில் இதே போட்டியின்போது உலக கராத்தே சாம்பியான vic moore-ஐ மிக எளிதாக வீழ்த்தினார். 

புரூஸ் லீயின் 8 குத்துகளில் ஒன்றைக் கூட மூரால் தடுக்க முடியவில்லை. புரூஸ் லீயின் உடல் வலிமைக்கு அடிப்படையான காரணங்களுள் மற்றொன்று அவரது உணவுப் பழக்கம். எந்த நிலைமையிலும், சுவை விருப்பத்திற்காக சத்தில்லாத உணவுகளை அவர் உட்கொண்டதே இல்லை என்று கூறப்படுகிறது. திரையுலகில் குறுகிய காலத்தில் பல உச்சங்களை பெற்றாலும் இறப்பதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் நாயகனாகத் தோன்றிய முதல் திரைப்படமே வெளியானது. 

‘தி பிக் பாஸ்’ என்ற அந்தத் திரைப்படம், ஆசியச் சந்தையில் வசூலைக் குவித்ததால், உலகம் முழுவதும் அறியப்படும் நபரானார் புரூஸ் லீ. ‘கேம் ஆஃப் டெத்’ என்ற இவரது நான்காவது திரைப்படத்துக்கான பணிகள் தொடங்கியபோது, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் என்டர் தி டிராகன் திரைப்படத்துக்கான அழைப்பு வந்தது. பிரமாண்டமான படைப்பாக இருக்கும் என்பதால்,‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, வார்னர் பிரதர்ஸின் அழைப்பை லீ ஏற்றுக் கொண்டார். 

1973-ஆம் ஆண்டு ஜூலை 26 -ஆம் தேதி திரைப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டது. அதற்கு 6 நாள் முன்னதாக லீ மரணமடைந்தார். 32 வயதில் புகழின் உச்சியில் இருந்த ஒரு கலைஞன் இறந்து போனதை அவரது ரசிகர்களால் மட்டுமல்ல, உலகத்தின் பலராலும் நம்ப முடியவில்லை. மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் மூளை வீக்கத்தால் லீ இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. எனினும் இன்று வரை அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அவர் மறைந்துவிட்டார், அவர் பதித்த தடம் இன்னும் மறையவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close