[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

நடுவானில் விமானத்தில் தீ: வைரலாகும் வீடியோ!

engine-ignites-aboard-philippine-airlines-flight-jet-lands-safely-at-lax

விமானம் நடுவானில் பறந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறங்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று மணிலாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. அதில் 347 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட அரை மணிநேரத்துக்குள் விமானத்தின் ஒரு என்ஜினில் திடீரென்று தீப்பிடித்தது. இதைக் கண்ட பயணிகள் அலறினர். 

விமானி, உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை தயாராக நிறுத்தப்பட்டன. தீப்பிடித்த அந்த விமானம் வேகமாக விமான நிலையத்துக்குத் திரும்பியது. தீயணைப்பு வாகனங்கள் தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

விமானம் தீப்பிடித்த நிலையில், தரையிறங்குவதை பலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close