[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு

gun-firing-in-america-seven-dead

அமெரிக்காவின் இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

கலிபோர்னியா மகாணத்தில் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். வீட்டிற்கு வெளியே பெரிய திரை அமைத்து கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல டன்கன் நகரில் உள்ள வால்மார்ட் வர்த்தக வளாகத்தில் வாகன நிறுத்தப் பகுதியில் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டதில் 2 பேர் உயிர் மாண்டனர். துப்பாக்கியால் சுட்டவர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸ் மாகாணத்தின் எல்பாசோ நகரில் உள்ள வால்மார்ட் வர்த்தக வளாகத்தில் அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 22 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close